கோவை, இருகூரை சேர்ந்தவர் கிருஷ்ணன் இவரது மனை மணி. இவர்களுக்கு சொந்தமான 3.5 நிலம் பூசாரி பழனிமலை தேவர் வீதியில் உள்ளது. இந்நிலையில் கிருஷ்ணன் வீடு கட்ட வங்கி கடன் வாங்க விண்ணபிக்க முயன்றார். அப்போது தனது பட்டா எண் கொண்ட நிலத்திற்கு ஏற்கனவே வங்கி கடன் கொடுக்கப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து விசாரித்த போது இருகூரை சேர்ந்த கமலம் என்ற மூதாட்டியின் பெயரில் 3.5 அரசு நிலத்திற்கு, கிருஸ்ணனின் பட்டா எண் வைத்து, அரசு முத்திரைகளை போலியான ஆவணங்களை தயார் செய்தும், அதை மூதாட்டி கமலம், இருகூரை சேர்ந்த ராஜசேகர், மனோரஞ்சிதம் ஆகியோர் பெயரில் பத்திர பதிவு செய்தது தெரியவந்தது.
மேலும் இந்த போலியான ஆவணங்களை வைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.50 லட்சம் கடன் வாங்கியதும் தெரியவந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட கிருஸ்ணன் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
மேலும் இது குறித்து பேசிய தன்னார்வலர் பரணிதரன் கூறும் போது : அரசு நிலத்தை போலி அரசு முத்திரை மற்றும் ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்த கமலம், ராஜசேகர், மனோரஞ்சிதம் மற்றும் ஆவணங்கள் தயார் செய்து கொடுத்த உதயநிதி என்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.