கோவை நீதித்துறை மண்டல பயிற்சி மையத்தில் மிக முக்கிய பிரமுகர்கள் தங்கும் விடுதி- சென்னை உயர்நீதிமன்றம் முதன்மை நீதிபதி திறந்து வைத்தார்..!

கோவை ரேஸ்கோர்சில் தமிழ்நாடு மாநில நீதித்துறை பயிலக மண்டல மையம்
உள்ளது. இங்கு மிக முக்கிய பிரமுகர் தங்கும் விடுதி, வாகன நிறுத்துமிடம்
மற்றும் ஓட்டுனர் ஓய்வு அறை கட்டிடம் ரூ.239.44 லட்சம் மதிப்பில்
கட்டப்பட்டது.

இந்த கட்டிட தரைத்தளம் மற்றும் 3 தளங்கள் வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது.
கட்டத்தின் மொத்தப் பரப்பளவு 7922 சதுரஅடி. இதில் தரைத்தளம் மற்றும் 3
தளங்களில் ஒவ்வொரு தளத்தில் கட்டிட பரப்பளவு 1984.00 சதுரஅடி ஆகும்.
கட்டிடத்தின் தரைத்தளத்தில் பார்வையாளர் அறை, சமையல் அறை, அலுவலகம்,
கவனிப்பாளர் அறை மற்றும் ஒட்டுனர் அறைகள் வசதியுடன் கட்டப்பட்டுள்ளது.
முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் தளங்களை கொண்டு கட்டப்பட்டு
ஒவ்வொரு தளத்திலும் முறையே இரண்டு தங்கும் அறையுடன் கூடிய உணவு அறை
மற்றும் கழிப்பறை வசதியுடன் கட்டப்பட்டுள்ளது.

இந்த கட்டிடத்தை சென்னை ஐகோர்ட்டு முதன்மை நீதிபதி முனிஸ்வர் நாத்
பந்தாரி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சென்னை ஐகோர்ட்டு
நீதிபதிகள் பரிஷ் உபத்ய, ஜி.ஆர். சுவாமிநாதன், சட்டத்துறை அமைச்சர்
ரகுபதி, நீதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கோவை நீதிமன்ற முதன்மை
நீதிபதி ராஜசேகர், கோவை மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகர போலீஸ் கமிஷனர்
பாலகிருஷ்ணன், கோவை மாவட்ட முதன்மை மாஜிஸ்ரேட் சஞ்சீவி பாஸ்கர் ஆகியோர்
கலந்து கொண்டனர்.