சூலூர் தெற்கு ஒன்றிய அஇஅதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் நடைபெற்ற கோயமுத்தூர் மாவட்ட அளவிலான ஜூனியர் மற்றும் சப்-ஜூனியர் பெண்கள் கபாடி சேம்பியன்ஷிப் போட்டி சூலூர் தனியார் மண்டப உள்ளரங்கில் செயற்கை ஆடுகளத்தில் நடைபெற்றது பெண்களுக்கான கபடி போட்டியில் 15 மேற்பட்ட அணிகள் பங்குபெற்றதில் 55 இடை பிரிவிலும் 35 கிலோ எடை பிரிவிலும் இரண்டு கட்டமாக நடைபெற்ற போட்டி இரண்டு போட்டியிலும் அமரர் எஸ். வி. ரங்கராஜ் நினைவாக வழங்கப்பட்ட சாம்பியன்ஷிப் கோப்பையை சூலூர் கல்ச்சுரல் அகாடமி வென்றது. தெலுங்கு பாளையம் இரண்டாவது இடத்தையும் மூன்றாம் இடத்தை தேக்கம்பட்டி அணியும் கோப்பை மற்றும் அதற்கு உண்டான ரொக்கப் பரிசையும் வென்றது
சூலூர் தெற்கு ஒன்றிய இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் சூலூர் ரா. சிவசங்கர் ஏற்பாட்டில் நடைபெற்ற இப் போட்டியில் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி கந்தசாமி தலைமை தாங்கி கபடி போட்டியை துவக்கி வைத்தார். தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ஜி. குமரவேல், மற்றும் வடக்கு ஒன்றிய செயலாளர் முத்து கவுண்டர் புதூர் ஊராட்சித் தலைவர் வி.பி கந்தவேல், ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கான கோப்பையும் அதற்கு நிகரான பரிசுத்தொகையையும் வழங்கினர். இந்நிகழ்வில் சூலூர்
பேரூராட்சி கழக செயலாளர் வழக்கறிஞர் கார்த்திகைவேலன், கழக அவைத்தலைவர்
ஏ.பி. அங்கணன், ஒன்றிய துணைத் தலைவர் அங்கமுத்து, வழக்கறிஞர் பிரிவு பிரபுராம், பேரூராட்சி மன்ற உறுப்பினர் சுமதி கார்த்திகை வேலன், மீனவர் அணி எஸ். ஏ. ஆறுமுகம், கலங்கள் நடராஜ், காடம்பாடி வினோத்குமார், பவி சண்முகம், எஸ் ஆர் எஸ் நகர் மோகன், மேஸ்திரி துரை, ஜிம் சிவகுமார், சேகர், நகர பொருளாளர் ஆனந்தன் மற்றும் ஒன்றிய,நகர
நிர்வாகிகள் இளைஞர் இளம்பெண் பாசறை நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0