கோவை மாவட்ட ஆயுதப் படையில் போலீஸ் ஐ.ஜி. செந்தில்குமார் ஆய்வு.

கோவை மாவட்ட ஆயுதப்படையில் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. செந்தில்குமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் ஆயுதப் படையில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அரசு வாகனங்கள், உடை, பொருட்களை ஆய்வு செய்தார். இதில் ஆண் மற்றும் பெண் போலீசார் அணி வகுப்பில் கலந்து கொண்டு தங்கள் உடல் வலிமையும், மன உறுதியையும் வெளிப்படுத்தினர். தொடர்ந்து சட்ட விரோத கூட்டத்தை கலைக்கும் கவாத்து உட்பட பல்வேறு கவாத்துக்கள் நடைபெற்றது.இந்த ஆய்வின் போது காவாத்து உடைப்பொருட்கள் மற்றும் அரசு வாகனங்களை சிறந்த முறையில் பராமரித்த போலீசாரை ஐ.ஜி.செந்தில்குமார் பாராட்டினார்.அத்துடன் ஆயுதப்படை போலீசாருக்கு சட்டம் – ஒழுங்கை பராமரித்தல், கைதி வழி காவல், முக்கிய பிரமுகர் வருகை போன்ற இதர பணிகள் குறித்து அறிவுரை வழங்கினார். அத்துடன் போலீசாரிடம் குறைகளையும் கேட்டறிந்தார் இந்த ஆய்வின் போது கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர்.