கோவை போத்தனூரை சேர்ந்தவர் சீனிவாசன் ( வயது 47) இவர் பூண்டி வெள்ளிங்கிரி மலையின் மீது ஏறினார். குரங்காட்டி பள்ளம் அருகே நடந்து சென்றபோது அவருக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பூண்டி அடிவாரப் பகுதியில் இருந்த சுமை தூக்கம் தொழிலாளர்கள் மூலம் 1-வது மலையில் இருந்து சீனிவாசனை அடிவாரம் தூக்கி வந்தனர். பின்னர் அங்குள்ள மருத்துவ முகாமில் பரிசோதித்து பார்த்தபோது சீனிவாசன் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து சீனிவாச உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வெள்ளிங்கிரி மலை ஏறும்பக்தர்கள் தொடர்ந்து இறந்து வருவது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0