கோவை கல்லூரி மாணவி திடீர் மாயம்..!

கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள சொக்கனூரை சேர்ந்தவர் ஐயப்பன். அவரது மகன் நந்தினி (வயது 21) இவர் கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரியில் பி.எஸ்.சி. மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் 26ம் தேதி கல்லூரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார் .இது குறித்து இவரது தந்தை ஐயப்பன் சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்துள்ளார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது . போலீசார் தேடி வருகிறார்கள்.