கோவை கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை..

கோவை;  கோவை துடியலூர் அருகே உள்ள கே. வடமதுரை, ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் சுரேந்திரன். இவரது மகள் சுவாதி (வயது 21 )கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி. இ. 3-ஆம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு கல்லூரி கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த சுவாதி நேற்று அவரது வீட்டில் மின்விசிறியில் சேலையை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தாயார் மேனகா துடியலூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.