கோவை கலெக்டர் அலுவலக பெண் ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை..

கரூர் மாவட்டம்,வெள்ளபதி, இந்திரா காலனியை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகள் சுகன்யா (வயது 28)கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்ஊழியராக வேலை பார்த்து வந்தார்.கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் இவர் கரூரிலிருந்து கோவைக்கு வந்தார். கோவை உப்பிலிபாளையம் தண்டு மாரியம்மன்கோவில் வீதி அருகே ஒரு வீட்டின் முதலாவது மாடியில் அறைஎடுத்துதங்கி இருந்தார். அங்கிருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு வேலைக்கு சென்று வந்தார். இந்தநிலையில் கடந்த 15 ஆம் தேதி மாலையில் வீட்டிற்கு சென்றவர் 16 -ஆம் தேதி வேலைக்கு வரவில்லை .இதனால் கலெக்டர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒருவர் அவரிடம் செல்போனில் தொடர்பு கொண்ட போது எடுத்த பேசவில்லை. இதனால் சந்தேகத்தின் பேரில் வந்து பார்த்தபோதுவீட்டின் கதவு உட் பக்கம் பூட்டப்பட்டிருந்தது அக்கம் ‘பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் கதவை திறந்து பார்த்தபோது சுகன்யா சுடிதார் துப்பட்டாவை மின்விசிறியில்கட்டி தூக்கில் தொங்கியது தெரியவந்தது. இது குறித்து அந்த வீட்டின் உரிமையாளர் சுப்புலட்சுமி ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர்அர்ஜுன்குமார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். சுகன்யா தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.இது தொடர்பாகவழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.