கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர் தற்பொழுது படையில் பணி புரிவோர் மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கோவை மாவட்டத்தை சேர்ந்த படைவீரர் தற்பொழுது படையில் பணி புரிவோர் மற்றும் படை வீரர் குடும்பத்தினர் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு, பட்டா மாறுதல், குடிநீர் இணைப்பு உள்ளிட்ட 25 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். அதனைத் தொடர்ந்து முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி மேம்பாட்டு நிதி உதவி திட்டத்தின் கீழ் ஆறு குழந்தைகளின் உயர்கல்விக்காக 1.85 லட்சம் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், புற்றுநோய் நிவாரண நிதியாக ஒருவருக்கு 14000 ரூபாய், தொகுப்பு நிதி கருணை தொகையாக ஒருவருக்கு 30 ஆயிரம் நிதி உதவி, ராணுவ பயிற்சி தொகுப்பு மானியத் தொகையாக ஒருவருக்கு 50 ஆயிரம் நிதி உதவி என ஒன்பது நபர்களுக்கு 2.79 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.