கோவையில் சி.பி.ஐ. அதிகாரி போல பேசி முதியவரிடம் ரூ.45 லட்சம் மோசடி 3 பேர் கைது.

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த 66 வயது முதியவரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தன்னை மத்திய புலனாய்வுத்துறை ( சிபிஐ) அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்னர் அவர் நீங்கள் சட்டவிரோதமாக பண பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதால் உங்கள் வங்கி கணக்கை ஆய்வு செய்ய வேண்டும். எனவே உங்கள் வங்கி கணக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் கொடுங்கள் என்று கேட்டுள்ளார். இதனால் பயந்து போன அந்த முதியவர் தனது வங்கி கணக்கு எண், ஏடிஎம் கார்டு எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கூறினார். அப்போது அவருடைய செல்போனுக்கு ஒரு முறை பயன்படுத்தும் ரகசிய எண் ( ஒடிபி) வந்தது. உடனே அந்த நபர் முதியவரை மீண்டும் தொடர்பு கொண்டு உங்களுக்கு வந்த ஓடிபி எண்ணை சொல்லுங்கள் என்று கேட்டுள்ளார் .உடனே அவர் ஒடிபி எண்ணை கூறினார். அடுத்த சில நிமிடங்களில் அந்த முதியவரின் வங்கி கணக்கில் இருந்த ரூ43 லட்சம் மோசடி செய்யப்பட்டது. இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அருண் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத் தினார் .இதில் சிபி ஐ.அதிகாரி போல பேசி முதியவரிடம் ஒடிபி எண்ணை பெற்று அவரின் வங்கிக் கணக்கில் இருந்து .பணத்தை தங்களின் வங்கி கணக்கிற்கு மாற்றி மோசடி செய்தது திருப்பூரை சேர்ந்த கும்பல் என்பது தெரியவந்தது. உடனே போலீசார் தீவிர தேர்தல் வேட்டை நடத்தி திருப்பூர் நல்லூர் பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன் ( வயது 61) சோமனூர் மயில்சாமி (வயது 43) பல்லடம், இச்சிப்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் ( வயது 41) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து ஏராளமான செல்போன் கள், சிம்கார்டுகள் ,வங்கி பாஸ் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.