கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். தொழிலதிபர். இவர் புலி நகத்தை கழுத்தில் தங்கச் சங்கிலியுடன் அணிந்திருந்தார். ” யூட்யூபில் ” ஒருவர் பாலகிருஷ்ணனிடம் பேட்டி கண்டபோது அது புலி நகம் என்றும் ஆந்திராவில் இருந்து வாங்கி வந்து அணிந் திருப்பதாகவும் பாலகிருஷ்ணன் கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைர லானது இது குறித்து கோவை மாவட்ட வனஅதிகாரி ஜெயராஜுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் கோவை வன பாதுகாப்பு அதிகாரி .அருண் தலைமையில் பாலகிருஷ்ணன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது வீட்டில் அவர் இல்லை . அவரதுவீட்டில் ஒரு மான் கொம்பு இருந்ததை கண்டுபிடித்தனர். சோதனையின் போது வெளியூர் சென்றிருந்த பால கிருஷ்ணனை வனத்துறையினர் வரவழைத்தனர். அவர் அணிந்திருந்த தங்கச்சங்கிலியில் இருந்த புலி நகம் ,வீட்டிலிருந்த மான் கொம்பை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து பாலகிருஷ்ணன் கைது செய்யப் பட்டார். பறிமுதல் செய்யப்பட்ட புலி நகம், மான் கொம்பு ஆகியவற்றை பரிசோதனைக்கு அனுப்பி உண்மைதானா? என்று உறுதி செய்யப்பட்ட பின்னர் அவர் மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் புலி நகத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்து தொழிலதிபர் பிடிபட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy1
Sleepy0
Angry1
Dead0
Wink0