கோவையில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர கோவை – அவிநாசி ரோட்டில் உப்பிலிபாளையம் முதல் தொட்டிபாளையம் பிரிவு வரை புதிய மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உப்பிலிபாளையத்தில்பழைய மேம்பாலம் 4 ரோடு சந்திப்பில் ரவுண்டானா வடிவில் உள்ளது..இதன் வழியாக காந்தி பார் குட் ஷெட் ரோடு, புருக் பாண்ட்ரோடு போன்ற இடங்களுக்குவாகனங்கள்சென்று வருகின்றன. இதனால்அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகிறார்கள். அங்கு போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றுபொதுமக்கள் சார்பிலும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டது .இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கலெக்டர் கிராந்தி குமார் நேற்று ஆலோசனை நடத்தினார் .மேலும் பழைய ரவுண்டானாவில் வாகன போக்குவரத்தை அதிகாரி பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதை தொடர்ந்து அங்கு போக்குவரத்து நெரிசலை தடுக்க பழைய மேம்பாலத்தை அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியதாவது:- கோவை அவினாசி ரோடு பழைய மேம்பால ரவுண்டானாவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது இந்த மேம்பாலத்திலிருந்து குட் ஷெட்ரோடு, புரூக் பாண்ட் ரோடு ஆகியவற்றுக்குஇறங்கும் பகுதி இரு வழி சாலையாகஇருக்கிறது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே அந்த சாலைகளை 4 வழி சாலையாக அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அப்படி செய்யும்போதுபோக்குவரத்து நெரிசல் ஏற்படாது. முதற்கட்டமாக போக்குவரத்து நெரசலைதடுக்க இந்தநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து அரசிடம் ஒப்புதல் பெற்ற பிறகு பழைய மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசலை தடுக்க கூடுதல் பணிகள் மேற்கொள்ளப்படும். இவர் அவர்கள் கூறினார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink1