கோவை போலீஸ் உதவி கமிஷனர்கள் இடமாற்றம்

கோவை; தமிழ்நாடு காவல்துறையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த 81 பேர் பதவி உயர்வு பெற்று உதவி கமிஷனர்களாகவும், போலீஸ் துணை சூப்பிரண்டு களாகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர் .இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று பிறப்பித்துள்ளது. அதன்படி கோவை சிறப்பு நுண்ணறிவு பிரிவு (எஸ்.ஐ சி ) இன்ஸ் பெக்டராக பணிபுரிந்து வந்த கனகசபாபதி பதவி உயர்வு பெற்று போத்தனூர் சரக உதவி போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு பொருளதார குற்ற பிரிவு இன்ஸ்பெக்டர் செல்லதுரை, ஆர். எஸ். புரம் . சரக உதவி கமிஷனராகவும்,ஈரோடு மாவட்டம் கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் கோவை மாநகர குற்றப்பிரிவு உதவி கமிஷனராக வும், ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன் ,நீலகிரி மாவட்ட குற்ற பதிவேடு கூடம் போலீஸ் துணை சூப் பிரண் டாகவும், நியமிக்கப்பட்டுள்ளனர் .அது போன்று ஆர். எஸ். புரம். சரக உதவி கமிஷனராக பணியாற்றிய நந்தினி,போத்தனூர் சரக உதவி கமிஷனர் மணிவர்மன் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்..