கோவை;லாரியில் கடத்தி வந்த 2,340 போலி மது பாட்டில் பறிமுதல். 4 பேர் கைது.

கோவை; கோவாவில் இருந்து போலி மது பாட்டில்கள் லாரி மூலம் கோவைக்கு கடத்தி வருவதாக கோவையில் உள்ள மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதை யடுத்து இன்ஸ்பெக்டர் காமராஜ், சப் இன்ஸ்பெக்டர் உதயசந்திரன் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர் அப்போது பல்லடத்தில் இருந்து மங்கலம் செல்லும் ரோட்டில் ஒரு லாரி சென்று கொண்டி ருந்தது. அந்த லாரிக்கு முன்னால் ஒரு காரும் (பைலட்) சென்று கொண்டிருந்தது. அதை பார்த்து சந்தேகம் அடைந்த போலீசார் அந்த லாரியை பின் தொடர்ந்து சென்று சேடப்பாளையம் பிரிவு அருகே தடுத்து நிறுத்தினர் .இதை யடுத்து அந்த காருக்குள் இருந்த 2 பேர் மற்றும் லாரியில் இருந்த 2 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்கு பின் முரணான பதில் கூறினர் .இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் லாரியில் சோதனை செய்தனர் அப்போது பயன்படுத்தப் படும் பொருட்களுக்கு அடியில் ஏராளமான அட்டைப்பெட்டிகள் இருந்தன. உடனே போலீசார் அந்த அட்டைப் பெட்டிகளை திறந்து பார்த்தபோது அதில் 195பெட்டிகளில் மது பாட்டில்கள் இருந்தது இதை யடுத்து போலீசார் லாரி மற்றும் காரில் இருந்த 4 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் சுதர்சன் ( வயது 40) சுந்தரவேலன் (வயது 41) லாரி டிரைவர் மாரிமுத்து (வயது 39) ராமு ( வயது 37) என்பதும் கோவாவிலிருந்து போலி மதுபாட்டில் களை பல்லடம் மற்றும் கோவைக்கு கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதை யடுத்து போலி மது பாட்டில்கள், ஒரு லாரி, ஒரு கார், ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.விசாரணையில் கோவாவில் இருந்து 750 மில்லி கொண்ட ஒரு பாட்டிலை 150 க்கு வாங்கி முகவர்களிடம் ரூ.250 விற்பனை செய்து வந்தனர். முகவர்கள் அந்த மது பானத்தை குவார்ட்டராக பிரித்து ஒரு குவாட்டர் மதுபாட்டில் ரூ.150 க்கு விற்பனை செய்து வந்தனர்.