சேவல் சண்டை சூதாட்டம். 18 பேர் கைது.

கோவை மாவட்டம் பேரூர் பக்கம் உள்ள பச்சாபாளையத்தில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக பேரூர் போலீசுக்கு தகவல் வந்தது .சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக அறிவொளி நகரை சேர்ந்த பச்சையப்பன் ( வயது 24) பைசல் ( வயது 20 )உக்கடம் ஜி. எம். நகர் .முகமது ஆசிக் (வயது 27) மன்சூர் (வயது 27) மதுக்கரை கணேஷ் குமார் (வயது 48) பேரூர் அரசு ( வயது42) ரவி ( வயது49) ஒண்டிப்புதூர் கிருஷ்ணமூர்த்தி ( வயது 38) பச்சாபாளையம் பொன்மணி ( வயது 22) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.. 3 சேவல்களும் சூதாட பயன்படுத்தப்பட்ட பணமும் செய்யப்பட்டது. இதே போல பொள்ளாச்சி ஆனைமலை பக்கம் உள்ள காளியாபுரம் சுடுகாடு பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக சோமநாதபுரம் மகேஷ் குமார் (வயது 53) உடைய குளம் தமிழ் வாணன் (வயது 20) கன்னியப்பன் ( வயது55) வேட்டைக்காரன் புதூர் அருண்குமார் ( வயது 27 )பகவதி (வயது 25 பட்டா கார்த்திக் ( வயது 24 )ஆகியோர் கைது செய்யப்பட்டது. சேவல்களும் சூதாட பயன்படுத்தப்பட்ட 740 ரூபாயும், 7 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல நெகமம் வடக்கு தோட்ட பகுதியில்சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக வட சித்தூர் சிவக்குமார் (வயது 53) ஆண்டிபாளையம் மகேஸ்வரன் (வயது32) மன்றாம் பாளையம் சுந்தரராஜ் (வயது 35 )ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 2 சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டது.