சேவல் சண்டை சூதாட்டம் – 2 பேர் கைது..!

கோவை துடியலூர் பக்கம் உள்ள கணபதி நகர் ,பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக துடியலூர் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் லதா சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாகஎன்.ஜி. ஜி. ஓ. காலனி, ஸ்ரீ கணபதி நகரைச் சேர்ந்த சந்தோஷ் குமார் ( வயது 23) சபரிநாதன் (வயது 18) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சூதாட பயன்படுத்தப்பட்ட 2 சேவல்களும், பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.