கோவை மத்திய சிறையில் கொலை, கொள்ளை, வழிப்பறி திருட்டு, போதைபொருள் கடத்தல்உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட தண்டனை- விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர் .அங்குள்ள வால்மேடு பகுதியில் 600 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இன்று காலையில் அறையில் இருந்து கைதிகள் திறந்து விடப்பட்டுள்ளனர். சிறை கைதிகள் தங்கள் அறைக்குள் சோதனை நடத்தக் கூடாது. மேலும் தங்களை பிரிக்க கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்து சிறை வார்டர்களுடன் தகராறு செய்தனர்.பின்னர் வார்டனை தாக்கத் தொடங்கினார்கள். இதனால் கைதிகளுக்கும் வார்டர்களுக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டது..இதையடுத்து லேசான தடியடி நடத்தப்பட்டது.இதில் சில கைதிகளும் காயமடைந்தனர்.பின்னர் சிறை கைதிகள் தினேஷ்,உதயகுமார் அரவிந்த் ஹரிஹரன் அழகர்சாமி அய்யனார் ஆகியோர் அங்குள்ள மரத்தில் ஏறிக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த மோதலில் சிறை வார்டர்கள் ராகுல்,மோகன்ராம், பாபு ஜான், விமல் ராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். சிறைக் கைதிகள் 7 பேர் பிளைடால் தங்கள் உடலில் வெட்டி காயப்படுத்திக் கொண்டனர். தாக்குதலில் படுகாயம் அடைந்த வார்டர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அரை மணி நேரத்துக்குள் கைதிகளின் ஆர்ப்பாட்டம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.இதையடுத்து கோவை மத்திய சிறையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது பற்றி தகவல் அறிந்ததும் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் சிறைத்துறை டிஐஜி சண்முக சுந்தரம், துணை போலீஸ் கமிஷனர் சந்தீஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். சிறைக்குள் நடந்த கைதிகள் – வாடர்கள் மோதல் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0