வால்பாறை அரசு மருத்துவமனை நோயாளிகள் நலச்சங்கத்திற்கு நகரச்செயலாளர் சுதாகர் நிதியுதவி

கோவை மாவட்டம் வால்பாறை அரசு மருத்துவமனையில் தற்காலிக பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களின் நலனுக்காக நோயாளிகள் நல சங்கத்திற்கு வால்பாறை திமுக நகர கழக செயலாளர் குட்டி என்ற ஆ.சுதாகர் மாதந்தோறும் ரூபாய் பத்தாயிரம் வழங்குவதாக உறுதியளித்தார். அதைத்தொடர்ந்து நேற்று முதற்கட்டமாக ரூ பத்தாயிரம் ரூபாயை அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் நித்யாவிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை மருத்துவர் ராஜசேகர், வால்பாறை நகர கழக திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் என்ற கிருஷ்ணமூர்த்தி, ஆதி திராவிட நல அணிதுணை அமைப்பாளர் மீசை குமார் , மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் உடனிருந்தனர்.