நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள முதல் கத்தோலிக்க ஆலயமான செயின்ட் மேரிஸ் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு சிறப்பு ஆடம்பர திருப்பலி நடைபெற்றது. இரவு 11 மணிமுதல் 12 மணிவரை கரோல் பாடல்கள் பாடப்பட்டன, பின் 12 மணிக்கு பங்கு குரு செல்வநாதன் குழந்தை ஏசு சுரூபத்தை கையில் ஏந்தி ஆலயத்தின் முன் புறம் இருந்து பீடத்தை நோக்கி எடுத்து வர பாரம்பரிய பாடலான ‘சைலன்ட் நைட் ஹோலி நைட்’ பாடல் பாட குழந்தை ஏசு பீடத்தில் வைத்து புனித படுத்தி உதவி பங்கு குரு டிக்சன் குழந்தை ஏசு சுரூபத்தை மாட்டு தொழுவத்திற்கு எடுத்து சென்று வைத்து தூபமிட்டு குருக்கள் வணங்கி வழிபட்டனர். பின்னர் ஆடம்பர திருப்பலி நடைபெற்றது . முன்னதாக வெள்ளை அமைதி கேண்டல் ஏற்றிவைக்கப்பட்டது . ஏராளமான பங்கு மக்கள் மற்றும் உதகைக்கு வந்த சுற்றுலா பயணிகள் நள்ளிரவு திருப்பள்ளியில் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர், நடைபெற்ற காலை 9 மணி திருப்பலி நீலகிரி மாவட்ட உதகை முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ் அவர்கள் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது, செயின்ட் மேரிஸ் ஆலயத்தின் பங்குத்தந்தை செல்வநா தன் ஏற்பாட்டில் மற்றும் காலை 9 மணி திருப்பதியில் ஏராளமான பங்கு மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் திருப்பள்ளியில் கலந்து கொண்டனர். ஆலயத்தின் உள்ளேயும் வெளியேயும் மின் விளக்குகளால் அலங்கரிக்க பட்டிருந்தது . அனைத்து ஏற்பாடுகளையும் பங்கு குருக்கள் வேதியர் நாதன் மற்றும செயின்ட் மேரிஸ் தேவாலயத்தின் இளைஞர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, திருப்பலிக்கு வந்த அனைவருக்கும் தேநீர் மற்றும் கேக்குகள் வழங்கி வாழ்த்தினர்,.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0