சமீபத்தில் சீன உளவு பலூனை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்திய நிலையில் தற்போது அந்த பலூனை கைப்பற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்காவில் உள்ள மௌண்டானா என்ற மாகாணத்தில் சீன பலூன் ஒன்று ரகசிய தகவல்களை சேகரிக்க அனுப்பப்பட்டதாகவும் இந்த பலூன் விமானங்கள் பறக்கும் உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது அமெரிக்க பாதுகாப்பு படைகள் அந்த பலூனை சுட்டு வீழ்த்தியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் சுட்டு வீழ்த்தப்பட்ட பலூன் கடலில் விழுந்த நிலையில் அந்த பலூனை தற்போது அமெரிக்க கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் கண்டுபிடித்து உள்ளனர்.
அந்த பலூனில் இருந்த கருவிகள் மற்றும் சிதறிய பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் ஒரு சில பாகங்கள் கடலில் விழுந்திருக்கலாம் என்று கூறப்படுவதால் அதை கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க கடற்படை ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. பலூனில் உள்ள கருவிகளை ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.