சீனாவின் உளவு பலூன்கள் குறித்து அமெரிக்கா இந்தியாவுடன் ஆலோசனை நடத்தி இருப்பதாக அமெரிக்கா விமானப்படை கமாண்டர் கென்னத் வில்ஸ்பாத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச வான் விதிகளை மதிக்காமல் அமெரிக்காவின் தென் கலிபோர்னியாவில் வானில் பறந்த சீனாவின் உளவு பலூன்களை அமெரிக்க விமானப் படையினர் சுட்டு வீழ்த்தினர்.
இந்நிலையில், சீனாவின் உளவு பலூன்கள் விவகாரம் குறித்து பல்வேறு நாடுகளின் விமானப்படை தளபதிகளுடன் ரகசிய பேச்சுவார்த்தை சுருக்கமாக நடத்தப்பட்டதாக அமெரிக்கா விமானப்படை கமாண்டர் கென்னத் தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சினைகள் பற்றி இந்தியாவுடனும் பேச்சு வார்த்தை நடந்ததாக அமெரிக்கா விமானப்படை கமாண்டர் கென்னத் தெரிவித்தார்.
ஆனால் “அவை மூடிய கதவுக்குள் நடந்த ரகசிய பேச்சு வார்த்தைகள்” என அமெரிக்கா விமானப்படை கமாண்டர் சுட்டிக்காட்டியுள்ளார்.