கோவையை சேர்ந்தவர் 18 வயது இளம்பெண் .இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது தாயாருடன் சாய்பாபா காலனி செல்வ தற்காக அரசு பஸ் ஏறினார். அந்த கல்லூரி மாணவி பஸ்சில் உள்ள இருக்கையில் தனியாக அமர்ந்திருந்தார். அப்போது திடீரென்று பின் இருக்கையில் இருந்த ஒருவரின் கை அந்த கல்லூரி மாணவி மீது உரசியது .இதனால் அவர் ஏதோ தெரியாமல் பட்டிருக்கலாம் என்று நினைத்து விட்டார். மீண்டும் பின்னால் இருந்து ஒரு கை அவர் மீது பட்டது. உடனே அந்த மாணவி பின்னால் திரும்பி பார்த்தார். அப்போது பின் இருக்கையில் ஒருவர் மட்டும் அமர்ந்திருந்தார். உடனே அந்த மாணவி சற்று தள்ளி அமர்ந்தார். சிறிது நேரம் கழித்து அந்த பஸ் காலை 10 -20 மணியளவில் தண்டு மாரியம்மன் கோவில் அருகே வந்தது .அந்த நபர் மீண்டும் அந்த மாணவியிடம் சில்மி ஷத்தில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி தனது தாயிடம் தெரிவித்தார். உடனே மாணவியின் தாயார் அந்த நபரிடம் ஏன்? இது போன்றசெயலில் ஈடுபடுகிறீர்கள். என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர் அந்த மாணவியையும் அவரது தாயாரையும் மிரட்டியதாக கூறப்படுகிறது.இதைப் பார்த்த அந்த பஸ்சில் இருந்த பயணிகள் அந்த ஆசாமியை பிடித்து தர்ம அடி கொடுத்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பொள்ளாச்சி உடுமலை ரோட்டை சேர்ந்த ரவி ( வயது 42) என்பதும் தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணியாற்றி வருவதும் தெரிய வந்தது. இதை யடுத்து ஆசிரியர் ரவி கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0