முதலமைச்சர் கோப்பை 2024 பளு தூக்கும் போட்டியில் மாநில அளவில் பள்ளி மாணவர் கள் மற்றும் மாணவர்களிடையே சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இப்போட்டியில் கோவை மண்டல அளவில்12 மாணவ மாணவிகள் பல்வேறு எடை பிரிவு களில் கலந்து கொண்டனர். இதில் சூலூர் ஜெய மாருதி தேகப் பயிற்சி சாலையில்பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் மூன்று பள்ளி மாணவர்களுக்கு பயிற்சியாளரக நேவி எஸ்.கே. பாஸ்கர், போலீஸ் சதீஷ் இவர்களின் சிறப்பு பயிற்சியில் நிஷாந்த், ஆகாஷ் மற்றும் ஸ்ரீ ரஞ்சன் ஆகியோரும் அவர்களின் பள்ளியின் சார்பில் இப்போட்டியில் கலந்து கொண்டனர். இதில் .நிஷாந்த் ஆறாவது இடமும் ஆகாஷ்,ஸ்ரீ ரஞ்சன் மூன்றாவது இடமும் பிடித்தனர். மூன்றாம் இடம் பெற்றவர்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற போட்டியில் பங்கு பெற்ற மாணவர் களுடன் பயிற்சியாளர்களும் சென்றிருந்தனர். வெற்றி சான்றிதலுடன் வருகை தந்த மாணவர்களை திமுக சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மன்னவன், பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், பயிற்சிசாலையின் தலைவர் பொன். கந்தசாமி, புதூரார் தங்கவேல், கோவை மாவட்ட பளு தூக்கும் சங்கத் தலைவர் எல் எம் டபிள்யூ சிவகுமார், கபடி கணேசன் , எஸ். கே. பழனிச்சாமி , எஸ். பி. தண்டபாணி, எஸ்பிஎஸ் ஜுவல்லரி கண்ணன், சண் முகசாமி, மற்றும் சக பளு தூக்கும் வீரர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
What’s your reaction?
Love1
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0