வால்பாறையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா..!

கோவை மாவட்டம் வால்பாறையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனாளர்களுக்கு காப்பீட்டு அட்டைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி ஆலோசனையின் படி மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, பொள்ளாச்சி சார் ஆட்சியர் பொறுப்பு சுரேஷ், வால்பாறை நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர், நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம், நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம், நகர் மன்ற துணைத்தலைவர் த.ம.ச.செந்தில் குமார், தலைமையாசிரியர் சிவன் ராஜ் ஆகியோர் முன்னிலையில் வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளிவளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் தலா 5 லட்சம் மதிப்பிலான காப்பீடு அட்டை 1072 பயனாளிகளுக்கும், மகளீர் குழுவினருக்கு வங்கிக்கடன், தையல் இயந்திரம், ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது மேலும் வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளி உள்கட்டமைப்பு பணிகளுக்காக சுமார் ஒரு கோடி மதிப்பில் நிதியுதவி அளித்து உதவிய கோவை மார்டின் குழுமத்தின் லீமா ரோஸிற்கு நினைவுப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது வெகுசிறப்பாக நடைபெற்ற இவ்விழாவில் சுமார் 84 கோடியே 81 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் பணிகளுக்காக நிறைவு செய்ததில் சுமார் 1163 பயனாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர் வெகு சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவில் அரசு அதிகாரிகளும், பொதுமக்களும், கட்சி நிர்வாகிகளும் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..