மத்திய பல்கலைக் கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை திரும்பப் பெறவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுதியுள்ளார்.
இந்தியா முழுவதும் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில், பல்வேறு இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டில் இருந்து பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். நுழைவு தேர்வு என்பது மத்திய அரசின் பிற்போக்குத்தனமான நடவடிக்கை எனவும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.