புகழேந்தியின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி

விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தியின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி (71) உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார். அவருக்கு ஏற்கனவே கல்லீரலில் புற்றுநோய் ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடரந்து, விழுப்புரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் எம்எல்ஏ புகழேந்தி அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று காலை அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக பொறுப்பு வகித்துவந்த புகழேந்தி, திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.