திருச்சியில் மக்களுடன் முதல்வர் முகாமில் காவல் துறை இயக்குனர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் ஆகியோரிடம் கொடுத்த புகார் மனுக்கள் மீது தீர்வு கண்டறியும் வகையில் பொதுமக்கள் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையர் காமினி IPS உத்தரவின் பேரில் பொதுமக்களின் குறைதீர்க்கும் வகையில் ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களைப் பற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது அதுபோல் திருச்சி மாநகரம், கே.கே.நகர் ஆயுதப்படை சமுதாய கூடத்தில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் மாநகர காவல் ஆணையர் தலைமையில் நடைபெற்றது.
பொதுமக்கள்இச்சிறப்பு முகாமிற்கு நேரில் வந்து கொடுத்த 53 மனுக்களை பெற்று, மனுக்கள்மீது உரிய தீர்வு காண சம்மந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளுக்கு அனுப்பி தக்க அறிவுரை வழங்கப்பட்டது
தமிழக முதல்வரால் தொடங்கப்பட்ட மக்களுடன்முதல்வர் முகாம் முதலமைச்சரின் தனிப்பிரிவு காவல்துறை தலைமைஇயக்குநரிடம் நேரடியாகவும் தபால் ஆன்லைன் மூலமாகவும் பொதுமக்கள் அளித்த 1001 மனுக்கள் பெறப்பட்டு, 880 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு மீதம்உள்ள 120 மனுக்கள் சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களின் மூலம் விசாரணை நடத்தி விரைவில் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் திருச்சி மாநகர காவல் ஆணையரிங சிறப்பு குறைதீர்ப்பு முகாமில் அளித்த 814 மனுக்களில் 478 மனுக்கள் மீது துரிதமாக தீர்வு காணப்பட்டு மீதம் உள்ள மனுக்கள் மீது முறையான விசாரணை நடைபெற்று வருகிறது.
முகாமில் காவல் துணை ஆணையர் வடக்கு மற்றும் தெற்கு, அனைத்து காவல் சரக உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள நிகழ்ச்சியாக அமைந்தது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0