கோவையில் ரூ.114 கோடியில் கட்டப்பட்ட தகவல் தொழில்நுட்ப பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கோவை; முதலமைச்சர் மு .க . ஸ்டாலின் தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டு வரும் மக்கள் நல திட்டங்கள் மற்றும் நலத்திட்ட பணிகள் மக்களை முழுமையாக சென்றடை கிறதா? என மாவட்ட வாரியாக சென்று கள ஆய்வு செய்ய உள்ளார். இதற்கான கள ஆய்வு பணியை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) கோவையில் இருந்து தொடங்கினார். இதற்காக இன்றும் நாளையும் 2 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற் கிறார். முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் திமுகவினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். காலை 11:30 மணிக்கு விளாங்குறிச்சியில் எல்காட் நிறுவனம் சார்பில் தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளா தார மண்டல வளாகத்தில் ரூ.114.16கோடி மதிப்பில் 8 தளங்களுடன் 3, 94 ஏக்கரில் கட்டப் பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டிடத்தை முதலமைச்சர் மு .க . ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் மதியம் 12 மணிக்கு சுகுணா திருமண மண்டபத்தில் கள ஆய்வுப் பணியின் ஒரு அங்கமாக முதலமைச்சர் முன்னெடுப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் நில எடுப்பிலிருந்து நிலங்கள் விடுவிக்கப் பட்டதற்கான ஆணைகளை அந்த நில உரிமையாளர்களுக்கு வழங்கினார். இதைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு போத்தனூர் பி.வி.ஜி. திருமண மண்டபத்தில் நடைபெறும் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்: அப்போது அவர் 2026- ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை வழங்கினார். இன்று இரவு அரசினர் விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். நாளை ( புதன்கிழமை) காலை 9 மணிக்கு கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் நடைபெறும் செம்மொழி பூங்கா கட்டுமான பணிக ளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆய்வு செய்கிறார். இதை யடுத்து அவர் திறந்த வெளி சாலையில் ஒரு பகுதியில் ரூ 300 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலக கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதை தொடர்ந்து மதியம் கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார். முதலமைச்சர் வருகையை யொட்டி கோவையில் 3, 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெளிமா வட்ட போலீசாரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.