முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று கோவை வந்தார் .ரூ 1,274கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி திறந்து வைத்தார்.கோவை மார்ச் 13முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்இன்று காலை 9:30 மணிக்கு தனி விமான மூலம் கோவை வந்தார் .விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. 9 -40 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு 10 – 45 மணிக்கு பொள்ளாச்சி ஆச்சி பட்டிக்கு சென்றார்.அங்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்றார். இந்த விழாவில் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் ரூ 416.69 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் ரூ 59.65 கோடி மதிப்பில் நிறைவு பெற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். 57,325 பயனாளிகளுக்குஅரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.இந்த விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்,தலைமைச் செயலாளர் ,கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். காரில் சென்ற முதலமைச்சரு க்கு கோவையில் இருந்து பொள்ளாச்சி வரை வழிநெடுகிலுமமக்கள் திரண்டு வந்து சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று விட்டு மதியம12 ,50 மணிக்கு விமான நிலையம் வந்தார். அங்கிருந்து 1மணிக்கு சென்னை புறப்பட்டு சென்றார்.முதலமைச்சர் கோவை பொள்ளாச்சி வருகையை யொட்டி மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன்,மேற்கு மண்டல ஐ.ஜி. பவானிஸ்வரி ஆகியோர் தலைமையில்பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. முதலமைச்சர் வருகையொட்டி கோவை -பொள்ளாச்சி ரோட்டில் காலை 8 மணி முதல் மதியம் 1மணி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0