கடன் தொல்லையால் சிக்கன் வியாபாரி தற்கொலை

கோவை சரவணம்பட்டி ,ஜனதா நகரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 47) இவர் மணியக் காரன் பாளையம் பஸ் ஸ்டாப்பில் கோழிக்கடை நடத்தி வந்தார்.. இவர் தொழில் அபிவிருத்திக்காக நிறைய பேரிடம் கடன் வாங்கி இருந்தார். அந்த பணத்தை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை .இந்த நிலையில்வாழ்க்கையில் வெறுப்படைந்த சண்முகம் நேற்று அவரது கோழிக்கடை அருகே சாணி பவுடர் குடித்து மயங்கி கிடந்தார் .அவரை சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டார். அங்கு சிகிச்சை அளித்தும்பலன் அளிக்காமல் நேற்று மாலை இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி யசோதா சரவணம்பட்டி போலீசில்புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.