கலைஞர் நூற்றாண்டு விழா முன்னிட்டு பள்ளி மாணவ மாணவியருக்கு செஸ் போட்டி…

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பவானிசாகர் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியங்கள் மற்றும் பவானிசாகர் பேரூர் திமுக சார்பில்  பள்ளி மாணவர்களுக்கிடையே வட்டார அளவிலான செஸ் போட்டிகள் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்டன.பள்ளி தலைமையாசிரியர் பழனியம்மாள் தலைமை தாங்கினார். பவானிசாகர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர்  மகேந்திரன்,தெற்கு ஒன்றிய செயலாளர் காளியப்பன் மற்றும் பவானிசாகர் பேரூராட்சி தலைவர் மோகன் ஆகியோர் செஸ் போட்டியை துவக்கிவைத்தனர். பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் சுப்புராஜ், நிர்வாகக்குழு உறுப்பினர் சந்திரமோகன், உதவி தலைமையாசிரியர் பொன்னு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆசிரியர் ஈஸ்வரமூர்த்தி அனைவரையும் வரவேற்று, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.  1முதல் 5 ஆம் வகுப்புவரை, 6 முதல் 8 வகுப்புவரை,9 முதல்10 வகுப்புவரை மற்றும் 11 முதல் 12 ஆம் வகுப்புவரை என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டியில் 39 பள்ளிகளிலிருந்து 207 மாணவ மாணவியர் கலந்துகொண்டனர். போட்டியில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் பின்னர் நடைபெறும் விழாவில் வழங்கப்படும். போட்டிக்கான ஏற்பாடுகளை பள்ளியின்
உடற்கல்வி இயக்குநர் சந்திரன் தலைமையிலான உடற்பயிற்சி ஆசிரியர் குழுவினர்  செய்திருந்தனர்.