சென்னை மீனாட்சி இயன்முறை மருத்துவ கல்லூரி சூலூர் பேரூராட்சி உடன் இணைந்து மருத்துவ முகாம்

சென்னை மீனாட்சி இயன்முறை மருத்துவ கல்லூரி சூலூர் பேரூராட்சி உடன் இணைந்து தொடர்ந்து இரண்டு வாரம் இயன்முறை மருத்துவ முகாம் நடைபெறுகிறது. கழுத்து வலி , தசைப்பிடிப்பு தோள்பட்டைகள் வலி, பக்கவாதம் முதுகு வலி, கை கால் வலி, தண்டுவட பாதிப்புகள் ஆகியவை குறித்து இலவச பிசியோதெரபி முகம் நடைபெறுகிறது இம்முகா மினை சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன் துணைத் தலைவர் கணேஷ், பேரூராட்சி மன்ற மூன்றாவது வார்டு உறுப்பினர் லலிதா ஆகியோர் முகாமினை துவக்கி வைத்தனர். இம்முகம் சூலூர் பகுதியில் 14 நாட்கள் நடைபெறுகிறது மூன்றாவது குலாலர் திருமண மண்டபம், சமுதாய நலக்கூடம், ஜி கே எஸ் நகர் நூலகம், கலங்கல் ரோடு கருப்பராயன் கோவில், இருளப்பசாமி கோவில் இம்முகம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.