கோவை டிசம்பர் 7 கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது) 48 கூலி தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர் சிவன். இவரது மனைவி சென்சி ( வயது 37) சிவன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார.இந்த நிலையில் ராஜேந்திரனு க்கும் சென்சிக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் ஜோடியாக பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தனர் .இந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி ஆனைமலை அருகே உள்ள ஒரு கோவில் மலை கோவிலுக்கு வந்தனர் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்றனர். அவர்கள் வாங்கி வைத்திருந்த விஷத்தை குளிர்பானத்துடன் கலந்து குடித்து வாயில் நூறை தள்ளியவாறு கட்டி பிடித்தபடி மயங்கி கிடந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர்க க்கள்பரிசோதித்துப் பார்த்துவிட்டு இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஆழியார் போலீசார் வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தினர். விசாரணையில் ராஜேந்திரனும், சென்சியும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்த கள்ளக்காதல் விவகாரம் இருவரின் குடும்பத்தினருக்கும் தெரியவந்து ள்ளது. இதனால் அவர்களை கண்டித்து உள்ளனர். இதை யடுத்து அவர்கள்ஆனைமலைக்கு வந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது காதல்ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0