திருச்சியில் பெண் காவலரின் செல்போன் நம்பரை கேட்ட சவுக்கு சங்கர்.

தமிழக காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்கள். குறித்தும் அவர்களது பணி குறித்தும் மிகவும் இழிவாக youtube சேனல் ஒன்றில் பேசியது தொடர்பாக சவுக்கு சங்கர். ஏற்கனவே கோவையில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள. நிலையில் திருச்சி மாவட்டம் முசிறி டிஎஸ்பி யாஸ்மின் அந்த காணொளியின் காரணமாக மிகப்பெரிய அளவில் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும். பல்வேறு இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியில் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் பெண் காவலர்களை மிக மிக மோசமாக சித்தரித்துள்ள சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும். திருச்சி மாவட்ட சைபர் கிரைம் பிரிவில் டிஎஸ்பி யாஸ்மின் புகார் அளித்த நிலையில் சவுக்கு சங்கர் மீது ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் திருச்சி மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் உள்ள நீதிபதி செல்வி ஜெயப்பிரதா முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்காக . கோவையில் இருந்து திருச்சி மாவட்ட காவல்துறையினரைச் சேர்ந்த பெண் காவலர்கள் அடங்கிய குழுவினர் அழைத்து வந்தனர். இதன் காரணமாக நீதிமன்றம் வளாகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். திருச்சி மாவட்ட கூடுதல் மகிலா நீதிமன்ற நீதிபதி செல்வி. ஜெயப்பிரதா முன்னிலையில் சவுக்கு சங்கர் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது கோவையில் இருந்து திருச்சி நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட போது, சவுக்கு சங்கர் மீது பெண் போலீஸ் எஸ்கார்ட் தாக்கியதாக சவுக்கு சங்கர் வழக்கறிஞர்கள், நீதிபதியிடம் புகார் தெரிவித்தனர்.இதனை அடுத்து நீதிபதி செல்வி ஜெயப்பிரதா சவுக்கு சங்கரை மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து பலத்த பெண் போலீசார் பாதுகாப்புடன் திருச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு முழு உடல் பரிசோதனை மருத்துவக் குழுவினரால் செய்யப்பட்டு அதன் விபரத்தை சீலிட்ட உறையில் வைத்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனை என்ன விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது நாளை தான் தெரிய வரும். இந்நிலையில் மீண்டும் திருச்சி மகிளா நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர் படுத்தப்பட்டார்.அப்போது நீதிபதி முன்பு அரசு வழக்கறிஞர் தரப்பிற்கும்- சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர்களுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர், “இந்த ஒரு விவகாரம் தொடர்பாக தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் வழக்கு தொடர்வது தேவையில்லாத ஒன்று. அதேபோன்று ஒரு வழக்குக்கு பல்வேறு இடங்களில் நீதிமன்றத்தில் ஆஜராகி காவல்துறை விசாரணைக்கு எடுக்கின்றனர். ஏற்கனவே நீதிமன்ற காவலில் இருக்கும் போது அவருடைய கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மீண்டும் மீண்டும் காவல்துறை விசாரணைக்கு எடுக்கும்போது அவர் கை எலும்பு முறிவு ஏற்பட்டது போல் நாளை அவர் கால் முறியும் சூழல் ஏற்படும் என்றனர்.
ஒரு விவகாரத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் வழக்கு போடுவதை தவிர்க்க வேண்டும் எனவும்,மேலும் பெண் காவலர்கள் நேம் பேட்ச் இல்லாமல் அழைத்து வந்ததும் வேனில் அவரை அடித்ததாக சொல்லப்பட்ட புகாரில் அழைத்து வந்த காவலர்களிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சவுக்கு சங்கர் வழக்கறிஞர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கு எதிர்வாதம் வைத்த அரசு தரப்பு வழக்கறிஞர்கள், “காவல்துறை சார்பில் விசாரணைக்கு எடுத்தால் மட்டுமே எதன் அடிப்படையில் அவர் அப்படி பேசினார். அவரிடம் என்ன முகாந்திரம் உள்ளது என்பது குறித்தான விவரங்கள் வெளியே கொண்டு வர முடியும் என வாதிட்டனர். வேனில் வரும்போது செல் நம்பர் கேட்டார் வழக்கறிஞர்களின் இருதரப்பு வாதத்தின் போது திடீரென உள்ளே வந்த பெண் காவலர்கள், இப்ப கூட வேனில் வரும்போது உங்கள் அனைவரையும் மீடியாவில் கிழிக்கிறேன் என சவுக்கு சங்கர் சொன்னதாக குற்றம் சாட்டினர். மற்றொரு பெண் காவலர் தான் கல்யாணம் ஆகாத நபராக பணியில் இருக்கிறேன் நான் அவருடன் வேனில் பயணிக்கும்போது எனது பெயர் மற்றும் எனது போன் நம்பர் கேட்டதாகவும், நான் வழங்கி இருந்தால் எனது பெயருக்கும் அவ பேர் ஏற்படுத்தி இருப்பார் என குற்றம் சாட்டினர். இதனால் நீதிபதி முன்பு பரபரப்பான விவாதம் இரு தரப்பினர் இடையே ஏற்பட்டது. பின்னர் இரு தரப்பு வாதத்தையும் கேட்டறிந்த நீதிபதி செல்வி ஜெயப்பிரதா, நாளை மதியம் ஒரு மணிக்கு மீண்டும் சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் அதுவரை அவர் கோவை செல்ல வேண்டாம் திருச்சி மத்திய சிறையில் அடைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இதனால் திருச்சி கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது.