கோவை: பிரபல யூடிப்பர் சவுக்கு சங்கர் கடந்த சில நாட்களுக்கு முன் இவர் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் போலீஸ் அதிகாரிகள் குறித்தும், பெண் போலீசார் குறித்தும் அவதூறாக கருத்துக்கள் கூறியிருந்ததாக தெரிகிறது. இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது குறித்து கோவை சைபர் கிரைம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுகன்யா அளித்த புகாரின்பேரில் மாநகரசைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து தேனியில் தங்கி இருந்த அவரை போலீசார் கடந்த 4-ந் தேதி கைது செய்து கோவை அழைத்து வந்து மத்தியசிறையில் அடைத்தனர். இந்த நிலையில் தேனியில் கஞ்சா வழக்கு தொடர்பாகவும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தேனி போலீசார் சவுக்கு சங்கரை கோவை மத்திய சிறையில் வைத்து கைது செய்து மதுரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி விட்டு மீண்டும் கோவை சிறைக்கு கொண்டு வந்து அடைத்தனர். மேலும் சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் குறித்தும் அவதூராக கருத்து வெளியிட்டதாக அந்த பெண் சென்னை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இதே போன்று பெண் போலீசார் குறித்து கருத்து தெரிவித்த சவுக்கு சங்கர் மீது தமிழர் முன்னேற்ற படையை சேர்ந்த வீரலட்சுமி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். எனவே 2புகார்களின் பேரில் சவுக்கு சங்கர் மீது சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்து கோவை சிறையில் வைத்து கைது செய்தனர். பின்னர் அவரை சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நேற்று பலத்த பாதுகாப்புடன் வேனில் சென்னைக்குஅழைத்து சென்றனர். சென்னை செல்லும் வழியில் ஈரோடு மாவட்டம் எல்லையில் சென்றபோது அவர் திடீரென்று தன்னுடைய கைவலிப்பதாகவும் உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவை என்று கூறினார். இதை யடுத்து போலீசார் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு கூட்டி சென்று உரிய சிகிச்சை வழங்கினார். அதன் பின்னர் சென்னை அழைத்துச் சென்றனர்..சவுக்கு சங்கர் மீது 8 வழக்குகள் போடப்பட்டுள்ளன.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0