கோவை பெண்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளை அவதூறாக பேசியதாக ” யூடியூபர் “சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்டு மீது கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவர்கள் 2பேரும் கைது செய்யப்பட்டனர். இதில் சவுக்கு சங்கரை சென்னை சிறையிலும் பெலிக்ஸ் ஜெரால்டு திருச்சி சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர் .கோவையில் பதிவான வழக்கில் 2பேருக்கும் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் அவர்கள் 2 பேரையும் போலீசார் நேற்றுபலத்த பாதுகாப்புடன் கோவை அழைத்து வந்தனர். பின்னர் அவர்கள் கோவை 4 – வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.அப்போது அவர்களுக்கு 55 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை வழங்கப்பட்டது. இந்த வழக்கை வருகிற 30-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதை யடுத்து சவுக்கு சங்கர் சென்னை சிறைக்கும், பெலிக்ஸ் ஜெரால்டை திருச்சி சிறைக்கும் போலீசார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy1
Sleepy0
Angry0
Dead0
Wink0