காஞ்சிபுரம் நகரில் சின்ன காஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு தேவராஜ் சுவாமி திருக்கோவிலில் வரதராஜா பெருமாள் கோவில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடந்தது வைகாசி பிரம்மோற்சவம் 17.5.2024 அன்று தொடங்கி 1.6.2024 வரை 16 நாட்கள் திருவிழா வெகு சிறப்பாக நடந்து வருகிறது இதன் ஒரு அங்கமாக இன்று 26.5.2024 திருத்தேர் உற்சவம் நடந்தது இத் திருவிழாவில் காஞ்சிபுரம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் 2 லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்தா கோவிந்தா என பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர் இந்த திருவிழா சம்ம ந்தமாக பாதுகாப்பு ஏற்பாடு குறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் கே சண்முகம் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்ட் துணை காவல் கண்காணிப்பாளர்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில் நிர்வாகிகள் மாநகராட்சி தீ அணைப்பு துறை அதிகாரிகள் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் போக்குவரத்து துறை பொதுப்பணித்துறை மின்வாரிய உயர் அதிகாரிகள் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர் இந்த திருவிழாவின் பாதுகாப்பிற்காக போலீஸ் சூப்பிரண்டு கே சண்முகம் வரலாறு காணாத பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார் 1500 போலீசார் ஊர்க்காவல் படையினர் நாட்டு நலப்பணி வீரர்கள் என் எஸ் எஸ் மாணவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் முக்கிய இடங்களில் உயர் கோபுரம் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணித்து வருகின்றனர்
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0