வணிகவியல் மன்ற நிறைவு விழா மற்றும் பிரிவு உபச்சார விழா

கோபி ஒத்தக்குதிரையில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் நடைபெற்ற வணிகவியல் மன்ற நிறைவு விழா மற்றும் இறுயாண்டு மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு கல்லூரியின் தலைவர் திரு.வெங்கடாசலம் அவர்கள் தலைமை தாங்கினார். இளம் விஞ்ஞானி திரு. ஜவகர் ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கல்லூரியின் முதல்வர் முனைவர். ஆ. மோகனசுந்தரம் மற்றும் கல்லூரியின் இயக்குனர் மருத்துவர்.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகுத்தனர். சிறப்பு விருந்தினர் தனது உரையில் மாணவர்கள் தாங்கள் எந்த துறையை சார்ந்தவராக இருந்தாலும், சாதனை எண்ணம் இருந்தால் எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும் சாதிக்கலாம். தான் சூரிய ஆற்றல் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டு வருவதாகவும், அதன் மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் நுண்ணீர் பாசனத்திற்கு தனியாக ஒரு உத்தியை கண்டுபிடித்துள்ளதாகவும் மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தார். எண்ணங்களை வலிமைப்படுத்துவதன் மூலமே ஒரு மனிதன் சாதிக்க முடியும், அதை செய்து வாழ்வில் சாதனையாளராக வரவேண்டும் என்று வாழ்த்தி தனது உரையை நிறைவு செய்தார். தலைவர் தமது வாழ்த்துரையில், வணிகவியல் துறை பல சாதனைகளை செய்து வருகிறது எனவே இந்த சாதனைகளை தொடர வாழ்த்துகிறேன். மேலும் இந்த பிரிவு உபசார விழா என்பது முடிவல்ல உங்கள் வாழ்வின் தொடக்கமாக அமைந்து வாழ்வில் பல வெற்றிகள் பெற்று நீங்கள் மிகவும் நன்றாக வாழ வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது உரையை நிறைவு செய்தார். முதல்வர் தனது தலைமையுரையில் இந்தக் கல்வியாண்டில் வணிகவியல் துறை பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. இதில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மிகப் பெரும் பங்காற்றி உள்ளனர் எனவே அவர்களுக்கு எனது வாழ்த்துகள் என்று தனது உரையில் தெரிவித்தார். மருத்துவர்.கண்ணன் அவர்கள், கல்லூரி காலங்களில் படிக்கும் போது கடினமாக உழைத்து பாடங்களை நன்றாக படித்தால் வாழ்வில் வெற்றி பெறலாம். நாங்கள் படித்த காலங்களை விட உங்களுக்கு பாடங்கள் மிக எளிய முறையில் கிடைக்கிறது. எனவே அதை பயன்படுத்தி வாழ்வில் நன்றாக வளர வேண்டும் என்று வாழ்த்துரை வழங்கினார். இந்த விழாவில் வணிகவியல் துறையில் ஆறு மாத செயல்பாடுகளை குறித்த செய்தி மடல் வெளியிடப்பட்டது. வணிகவியல் துறை தலைவர் மற்றும் துணை முதல்வர் முனைவர். சி. நஞ்சப்பா அவர்கள் ஆண்டறிக்கை வாசித்தார். முனைவர்.கோமதி வரவேற்புரை வழங்கினார். பேராசிரியை. கௌரி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுடன் விழா இனிதே நிறைவுற்றது. இறுதியில் பேராசிரியர். நவீன்குமார் நன்றி உரை நல்கினார். இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள்.சதீஷ் மற்றும் கிருஷ்ணகுமார், சுவாதிகா, பொன்மொழி மாணவர்கள் விமல்குமார் சமீம் அகமத், அனீஷ் மற்றும் துறைப் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.