கோவை: தமிழகத்தில் பிரபல யூடியூப்பராக வலம் வருபவர் சவுக்கு சங்கர். இவர் தனது யூடியூப்சேனலில் அரசியல் தொடர்பான தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். சவுக்கு சங்கரின் யூடியூப் சேனலை லட்சக்கணக்கானோர் பின் தொடர்ந்து வருகின்றனர். இது தவிர பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் சவுக்கு சங்கர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். சவுக்கு சங்கர் சமீபத்தில் ஒரு யூடியூப்சேனலுக்கு அளித்த பேட்டியில் போலீஸ் அதிகாரிகள் குறித்தும் பெண் காவலர்கள் குறித்தும், பாலியல் தொடர்பான அவதூறுகருத்துக்களை தெரிவித்து இருந்தார். இது பரபரப்பு ஏற்படுத்தியதுடன் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனை தொடர்ந்து சவுக்கு சங்கரின் பேட்டிக்கு போலீஸ் அதிகாரிகள், மகளிர் போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர் .சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு கருத்துக்களும் பதிவிடப்பட்டது. சவுக்கு சங்கரின் சர்ச்சைக்குரிய இந்த பேட்டி குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் சப் இன்ஸ்பெக்டர் சுகன்யா புகார் அளித்தார். அதன் பேரில் சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் தேனியில் தங்கி இருப்பதாக கோவை சைபர் கிரைம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று முன்தினம் நள்ளிரவு கோவை, திருச்சி சேர்ந்த 20-க்கு மேற்பட்ட போலீசார் தேனிசென்றனர். அவர்கள் தேனி பகுதியில் உள்ள லாட்ஜில் தீவிரசோதனை நடத்தினார்கள். அப்போது தேனி அருகே பழனி செட்டி பட்டியில்உள்ள ஒரு லாட்ஜில் சவுக்கு சங்கர் அறைஎடுத்து தங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாலை 3 மணி அளவில் போலீசார் சவுக்கு சங்க ர் தங்கி யிருந்த அறைக்கு சென்று தட்டி எழுப்பி அதிரடியாக கைது செய்தனர். விசாரணைக்காக போலீஸ் வேனில் ஏற்றி கோவைக்கு அழைத்து வந்தனர். இதற்கிடையே சவுக்கு சங்கரை ஏற்றி சென்ற வேன் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புறவழிச்சாலை ஐ.டி.ஐ. கார்னரி பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த ஒரு காரும் போலீஸ் வேனும் எதிர்பாராதமாக நேருக்கு நேர் மோதி கொண்டது. இந்த விபத்தில் சவுக்கு சங்கம் மற்றும் 2 போலீசார் காயமடைந்தனர். உடனே அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகுமாற்று வாகனத்தில் சவுக்கு சங்கர் கோவை போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டார். அங்கு சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் கைதான சவுக்கு சங்கரை கோவை கோர்ட்டில் ஆஜர் படுத்த போலீசார் வேனில் அழைத்து வந்தனர். அப்போது திமுக மகளிர் அணி அமைப்பாளர் அன்னம்மாள் தலைமையில் நீதிமன்றம் முன் திரண்ட மகளிர் அணியினர் வேனை முற்றுகையிட்டு சவுக்கு சங்கருக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். செருப்புகளை தூக்கி காண்பித்தனர். அப்போது போலீசார் மகளிர் அணியினரைவலுக்கட்டாயமாக விலக்கி விட்டு வேனை நீதிமன்ற வளாகத்துக்குள் கொண்டு சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது .போராட்டம் நடத்திய பெண்கள் கூறும்போது அரசாங்கத்தில் வேலை செய்யும் பெண்களை இழிவாகவும் காவல்துறை அதிகாரிகளை மிகவும் இழிவாகவும் சவுக்கு சங்கர் பேசி வருகிறார். எந்த காரணத்தைக் கொண்டும் அவரை வெளியே விடக்கூடாது .அவருக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும்.என்று கூறினார்கள்.பின்னர் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0