செயின் பறிப்பு கொள்ளையன் மீது குண்டர் தடுப்புசட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம், பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண்களிடம் தங்கசங்கலி பறிப்பு வழக்கில் ஈடுபட்ட நாகராஜன் மகன் விஷ்ணு (வயது 29) என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து இவர் வழிப்பறி வழக்கில் ஈடுபட்டு வந்ததால் இவரை குண்டர் தடுப்புசட்டத்தின்கீழ்கைது செய்ய கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் பரிந்துரை செய்தார்.
அப்பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர். கிராந்தி குமார் பாடி, மேற்கண்ட நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். மேற்படி உத்தரவின்படி வழிப்பறி வழக்கு குற்றவாளியான விஷ்ணுவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.