கோவை துடியலூர் அருகே உள்ள கே .என். ஜி .புதூர் மாரியம்மன் கோவில் அருகே மளிகை கடை நடத்தி வருபவர் நந்தகோபால். இவரது மனைவி பாக்கியலட்சுமி (வயது 64) நேற்று காலையில் பாக்கிய லட்சுமி கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது 25 வயது மதிக்கத்தக்க இருவர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். பால் பாக்கெட் வேண்டும் என்று கேட்டனர். அவர் பால் பாக்கெட்டை குளிர்சாதனப்பெட்டியில் இருந்து எடுத்து கொடுப்பதற்காக திரும்பிய போது. அந்த ஆசாமிகள் பாக்கியலட்சுமி கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை பறித்துவிட்டு பைக்கில் தப்பிச் சென்றுவிட்டனர். இது குறித்து துடியலூர் போலீசில்புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் விதின்குமார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களைதேடி வருகிறார்கள்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0