குழந்தைக்கு பால் ஊட்டி கொண்டிருந்த தாயிடம் செயின் கொள்ளை முயற்சி.

கோவை பீளமேடு அருகே உள்ள சின்னியம்பாளையம், கமலம் நகரை சேர்ந்தவர் பாண்டியராஜன் ( வயது 36 )இவரது மனைவி நேற்று அவரது வீட்டின் முன் உட்கார்ந்து குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு 20 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர்மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் பாண்டியராஜன் மனைவி கழுத்தில் கிடந்த 6 பவுன் செயினை பறிக்க முயன்றார். அவரது மனைவிசெயினை இறுக பிடித்துக் கொண்டதால் செயினை பறிக்க முடியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையன் பாண்டியராஜன் மனைவி கீழே தள்ளிவிட்டு பைக்கில் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் தமிழரசு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.