டிஆர்எப்(TRF) அமைப்பை மத்திய அரசு தடை- முகமது அமீன் தீவிரவாதியாக அறிவிப்பு..!

பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்போடு தொடர்புடைய தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட்(TRF) அமைப்பை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று தடை செய்து உத்தரவிட்டது.

மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட் அமைப்பு ஆன்லைன் வழியாக இளைஞர்களை ஈர்த்து அவர்களை தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுத்துகிறது. தீவிரவாத அமைப்புகளில் சேர்த்து விடுகிறது. அது மட்டுமல்லாமல் தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவ துணை புரிதல், பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள், போதைப் பொருட்களை ஜம்மு காஷ்மீருக்கு கொண்டு வருவதையும் இந்த அமைப்பு செய்து வருகிறது.