வால்பாறை அரசு உதவி பெறும் பள்ளியில் திமுக மற்றும் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் சார்பாக குழந்தைகள் தினவிழா கொண்டாட்டம்

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தமிழக அரசு உதவிபெறும் பள்ளியில் குழந்தை கள் தினவிழா திமுக மற்றும் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் சார்பாக வட்டார கல்வி அலுவலர், பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் நடைபெற்றது இவ்விழாவில் வார்டு செயலாளர் சிடி முருகானந்தம், உதயநிதி ஸ்டாலினின் நற்பணி மன்றத்தின் கோவை மாவட்ட துணைத்தலைவர் ரமேஷ் ராஜ், நகர் மன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன், நிர்வாகிகள் மீசை குமார், முரளிதரன், மகேந்திரன், பாண்டிய ராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பள்ளிக் மாணவ மாணவி களுக்கு பேனா, பென்சில் மற்றும் இனிப்பு வழங்கி அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துகளை தெரிவித்தனர்.