குடியரசு தின விழாவில் மரக்கன்று வழங்கி கொண்டாட்டம்

கோவை தடாகம் சாலை சிவாஜி காலனி சவுடாம்பிகை நகரில் உள்ள அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை சார்பில் 74வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு நிறுவனத் தலைவர் வக்கீல் வீ. புஷ்பானந்தம் தலைமை தாங்கினார்.இந்த நிகழ்ச்சியில் வார்டு அதிமுக முன்னாள் கவுன்சிலர் ராஜகோபால், விஜயகுமார், வக்கீல் மணிமுருகன், நீலமயம் அறக்கட்டனை தலைவர் சவுகத் அலி, பைரவர் சித்தர் கணுவாய் அம்மா, வடவள்ளி முனைவர் காந்திமதி, வங்கி ஊழியர் உமா, மதிமுக பிரமுகர் மார்சல், கலைமகள் அகாடமி இயக்குநர் டாக்டர் மகேஸ்வரன், செல்வபுரம் திமுக பிரதிநிதி அன்பழகன், பெரியநாயக்கன்பாளையம் வெங்கடாசலபதி, சவுடாம்பிகை நகர் ராமராஜ், அப்துல் ரசாசாக், லோகு, காயத்ரி, வழக்கறிஞர் குமாஸ்தாக்கள் லட்சுமி, கணேசன், திவ்யா தேவராஜ், பூசாரிபாளையம் ராஜேந்திரன், தரன் மற்றும் தனபால், முபாரக், செல்வராஜ், ஜெபா,மோகன்ராஜா, வர்ஷா,வர்ஷினி, ஈஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் போது அனைவருக்கும் மரக்கன்று, இனிப்பு வழங்கப்பட்டது. இறுதியில் வக்கீல் புஷ்பானந்தம் அனைவருக்கும் நன்றி கூறினார்.