பிப்ரவரி 1-ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28-ஆவது கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு பிறகு பிப்.1ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளது.இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி மாநில நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.கடைசியாக காவிரி மேலாண்மை கூட்டம் நவம்பர் 3ம் தேதி நடைபெற்றது. இதன்பிறகு மூன்று மாதங்களாக இந்த கூட்டம் நடைபெறவில்லை. இருப்பினும், கடந்த 18ம் தேதி காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்துக்கு காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 5.26 டிஎம்சி தண்ணீர் திறக்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டத்தை கூட்ட வேண்டும் என தமிழக அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்தவகையில், பிப்ரவரி 1-ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தின் பரிந்துரையின் அடிப்படையில், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவு பிறப்பிக்க கோரி தமிழக அரசு கோரிக்கை வைக்கவுள்ளது. மேலும், மேகதாது அணை தொடர்பாக விவாதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த கூட்டத்தில் மேகதாது அணை தொடர்பாக விவாதம் வைக்கக் கூடாது என்று தமிழக அரசு தரப்பில் கோரிக்கை வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0