நடுரோட்டில் பட்டாசு வெடித்த பாஜகவினர் மீது வழக்குபதிவு..!

கோவையை அடுத்த துடியலூர் பஸ் நிலையம் அருகே நேற்று பா.ஜ.கவை சேர்ந்த சிலர் சட்ட விரோதமாக கூடி பட்டாசு வெடித்தார்களாம். அப்போது அதை தட்டிக் கேட்ட சப் இன்ஸ்பெக்டர் அருண் குமாரை மிரட்டி பணி செய்ய விடாது தடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து துடியலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் பாஜகவை சேர்ந்த சாய்ஜு, கிருஷ்ணன் உட்பட சிலர் மீது அரசு ஊழியர்களை பணி செய்வதற்கு தடுத்தல், சட்ட விரோதமாக கூடுதல் பட்டாசு வெடித்தல் ஆகிய உள்பட 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதே போல துடியலூர்-வெள்ளக்கிணறு ரோட்டில் சட்ட விரோதமாக கூடி பட்டாசு வெடித்த நீலகிரி மாவட்ட பாஜக பொறுப்பாளர் நந்தா, பாஜக பெண்கள் அணி மாவட்ட துணைத் தலைவி வத்சலா, இளங்கோ உட்பட சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.