நடு ரோட்டில் ஆசிரியை மீது தாக்குதல் கணவர் உட்பட 5 பேர் மீது வழக்கு

கோவை கணபதி நகர் பிரிவு, குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கவுதமி (வயது 30) யோகா ஆசிரியை. கணவர் பெயர் சிரஞ்சீவி.இவர்களுக்குள் ஏற்பட்டதகராறில் கணவர் சிரஞ்சீவி மனைவி கவுதமியை அடித்து விட்டார். இதனால் 20 23 ஆம் ஆண்டு முதல் இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். இதனால் கவுதமி தனது மகனுடன்அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கவுதமி தனது மகனை பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டுக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த கணவர் சிரஞ்சீவி மற்றும் குடும்பத்தினர் கவுதமியை தாக்கி அவரது மகனை அழைத்துச் சென்று விட்டனர். இதுகுறித்து கவுதமி சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த்சாரணை நடத்தி கணவர் சிரஞ்சீவி மாமனார் ஜெகநாதன் ,மாமியார் தனலட்சுமி உறவினர்கள் ரகுராம் உட்பட 5பேர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், தாக்குதல் உட்பட 4பிரிவுகளில்வழக்கு பதிவு செய்துள்ளார்.