வரதட்சணை கொடுமை கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு

கோவை சாய்பாபா காலனி கே கே புதூரைசேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரது மகள் சுஜா பாலசுப்பிரமணியம் வயது 27 இவர் கோவை மத்திய பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் செய்துள்ளார். அதில் அவர் தனக்கு 4- 6 – 2021 அன்று திருமணம் நடந்ததாகவும்,அதன் பிறகு தனது கணவர் இம்மானுவேல், மாமனார் .மாமியார், நாத்தனார் ஆகியோர் சேர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கூறியுள்ளார். இது குறித்து அனைத்து மகளீர் போலீசார் கணவர் இம்மானுவேல் உட்பட 4 பேர் மீது வரதட்சணை கொடுமை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.