கோவை சவுரிபாளையம், எல்லைத் தோட்டம், இந்திரா நகரை சேர்ந்தவர் குப்பன் இவரது மகன் பிரபு (வயது 33)இவர் ஊர் காவல் படை வீரராக வேலை பார்த்து வந்தார். நேற்று அதிகாலை 1.45 மணி அளவில் இவரும் பீளமேடு காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் சவுரி பாளையத்தில் வசிக்கும் ரவி ( வயது 57)என்பவரும் ஒரே ஸ்கூட்டரில் கொடிசியா ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் ரவி ஸ்கூட்டர் ஓட்டி சென்றார். பிரபு பின்னால் அமர்ந்திருந்தார். அவிநாசி ரோடு கொடிசியா திருப்பத்தில் செல்லும்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் இவர்கள் சென்ற ஸ்கூட்டர்மீது மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.. ஊர் காவல் படை வீரர் பிரபு அதே இடத்தில் இறந்தார். சிறப்பு இன்ஸ்பெக்டர் ரவி படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .இது குறித்து கோவை போக்குவரத்து புலனாய்வுபோலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் தங்கமணி,சப் இன்ஸ்பெக்டர் , ஆனந்தகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள் விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற சிவப்பு கலர், ” வால்க்ஸ் வேகன்” காரை தேடி வருகிறார்கள். விபத்தில் பலியான ஊர்க்காவல் படை வீரர் பிரபுவுக்கு பிரீத்தி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0